×

சேலம் உள்பட 4 மாவட்டங்களில் ரூ.10 கோடிக்கு மாம்பழம் விற்பனை

பழங்களின் ராஜா என்றும் முக்கனியில் முதல் கனி என்றும் அழைக்கப்படும் மாம்பழம் உற்பத்தியில் இந்தியா முதலிடத்தில் உள்ளது. உலகளவில் 40 சதவீதம் உற்பத்தி இந்தியாவில் நடக்கிறது. அந்த வகையில் தமிழகத்தில் கிருஷ்ணகிரி, தர்மபுரி, சேலம், விருதுநகர், தேனி உள்பட பல்வேறு பகுதிகளில் 50 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஏக்கரில் மா சாகுபடி செய்யப்பட்டுள்ளது. இந்த பகுதிகளில் சேலம் பெங்களூரா, அல்போன்சா, மல்கோவா, பங்கனபள்ளி, செந்தூரா, நடுசாளை, குண்டு, இமாம்பசந்த், குதாதத், நீலம் உள்பட பல வகையான மாம்பழ ரகங்கள் சாகுபடி செய்யப்பட்டு வருகிறது. இதன் மூலம் சேலம், நாமக்கல், தர்மபுரி, கிருஷ்ணகிரி மாவட்ட விவசாயிகள் மற்றும் வியாபாரிகளுக்கு பல லட்சம் வரை வருவாய் கிடைத்துள்ளது.

இதுகுறித்து சேலத்ைத சேர்ந்த மாம்பழ வியாபாரிகள் கூறியதாவது: கிருஷ்ணகிரி, தர்மபுரி, சேலம், நாமக்கல் மாவட்டங்களில் 30 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஏக்கரில் மா பயிரிடப்பட்டு உள்ளது. இந்த பகுதியில் மாம்பழம் சீசனின்போது 70 ஆயிரம் முதல் 75 ஆயிரம் டன் மாம்பழ விளைச்சல் கிடைக்கிறது. நடப்பாண்டு அனைத்து பகுதிகளிலும் மா விளைச்சல் நல்லமுறையில் இருந்தது. குறிப்பாக சேலம் பெங்களூரா, பங்கனப்பள்ளி, மல்கோவா, குதாதத் உள்ளிட்ட ரக மாம்பழங்கள் அமோக விளைச்சலை தந்தது. நடப்பாண்டு மாம்பழ சீசனில் சேலம், நாமக்கல், தர்மபுரி மற்றும் கிருஷ்ணகிரி மாவட்டங்களில் மாம்பழம் சீசன் களை கட்டியது. தமிழகத்தில் பல்வேறு மாவட்டங் களுக்கும் மற்றும் அண்டை மாநிலங் களுக்கும் மாம்பழங்கள் அனுப்பியதன் மூலம் சேலம் உள்பட 4 மாவட்டங்களில் நடப்பாண்டு சீசனில் சுமார் ரூ.10 கோடி அளவுக்கு மாம்பழங்கள் விற்பனை நடந்துள்ளது. இவ்வாறு மாம்பழ வியாபாரிகள் கூறினர்.

The post சேலம் உள்பட 4 மாவட்டங்களில் ரூ.10 கோடிக்கு மாம்பழம் விற்பனை appeared first on Dinakaran.

Tags : Salem ,India ,Gani ,Mukuni ,Dinakaran ,
× RELATED கோயில் திருவிழாவில் சாதி பாகுபாடு;...